உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், ஆண்டும்தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதில் முக்கியமான திருவிழாவான சித்திரைத் திருவிழாவும் ஒன்று.
இதில் மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் பலரும் எதிர்பார்த்து இருந்த சித்திரை திருவிழா 2025 இல் ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்கி மே 12ஆம் தேதி நிறைவடைகிறது. இதில் சிறப்பம்சமாக சித்திரை திருவிழாவின் தேரோட்டம் ஒரு முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆன்மீகம், பூமி, வரலாறு, கலை, பண்பாட்டு, அடையாளங்களுடன் இந்த தேரோட்டம் இன்று நிகழ்ந்து ஏறியது. லட்சக்கணக்கான மக்களும் திரண்டு தேரோட்டத்தில் பங்கு கொண்டனர். இளைஞர்கள் தேரை இழுக்க, அனைவரும் `மீனாட்சி சுந்தரேஸ்வரர்’ என்ற முழக்கத்தோடு நான்கு மாதி வீதிகளிலும் கம்பீரமாக வந்தது. அதன் சிறப்பு காட்சிகளை காணலாம்.

