
ஒருவரின் உள்மனதில் மகிழ்ச்சி, சந்தோஷம், நிம்மதி போன்ற எதுமே இல்லை என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள் இங்கே காணலாம்:
1. எதிலும் ஆர்வமின்மை:
முன்பு சந்தோஷம் அளித்த விஷயங்களில் இப்போது கொஞ்சம் கூட ஈடுபாடு இல்லாமல் இருப்பது.
2. தொடர்ச்சியான சோர்வு:
பெரிதாக எந்த வேலையும் செய்யாமலே, போதிய ஓய்வுக்குப் பிறகும் எப்போதும் களைப்பாகவே உணர்வது.
3. சமூகத்திலிருந்து விலகுதல்:
நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூக நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கியே இருப்பது.
4. எதிர்மறை எண்ணங்கள்:
எல்லாவற்றையும் நம்பக்கத் தன்மையுடன் பார்க்காமல் குறை சொல்லும் மனப்பான்மை மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளுடனே பார்ப்பது.
5. தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம்:
சரியான நேரத்தில் உறங்க செல்லாமல் இருப்பது. தூக்கம் இல்லாமல் தவிப்பது அல்லது அளவுக்கு அதிகமாக தூங்குவது.
6. பசியின்மை அல்லது அதிக பசி:
உணவுப் பழக்கத்தில் திடீர் மாற்றங்கள். பிடித்தமே இல்லாமல் உணவுகளை உண்பது.
7. எரிச்சல் மற்றும் பொறுமையின்மை:
சிறிய விஷயங்களுக்குக் கூட அதிகமாக எரிச்சல் அடைவது மற்றும் மிகவும் கோபப்படுவது போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவது.
8. குறைந்த தன்னம்பிக்கை:
எல்லா விஷயத்திலும் எப்போதும் தன்னைப் பற்றிய தாழ்வான எண்ணம் மற்றும் தன்னம்பிக்கை குறைவு.
9. அழுகை வருவது போன்ற உணர்வு:
எந்த காரணமும் இல்லாமல் வருத்தமாக, சோகமான உணர்வது அல்லது அழுகை வருவது போன்று தோன்றுவது.
10. உடல் உபாதைகள்:
அடிக்கடி தலைவலி, வயிற்று வலி போன்ற உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவது.
மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால், அவர் மனதளவில் மகிழ்ச்சியாக இல்லை என்பதை உணரலாம்.
இது போன்ற சமயங்களில், ஒரு மனநல ஆலோசகரை சந்திப்பது அல்லது நம்பிக்கையானவர்களிடம் பேசுவது உதவியாக இருக்கும்.
மேலும் தொடர்ந்து படிக்க… http://www.shadowmakr.in

