
12 ஆம் வகுப்பிற்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் ஏராளமான உயர்கல்வி வாய்ப்புகள் உள்ளன. இத்துறை, தொழில்நுட்ப உலகின் எதிர்காலமாகப் பார்க்கப்படுகிறது.
தரவுகளைப் புரிந்துகொள்ளுதல், பகுப்பாய்வு செய்தல், முடிவெடுத்தல், மற்றும் தானியங்கு அமைப்புகளை உருவாக்குதல் போன்ற திறன்களை AI படிப்புகள் வழங்குகின்றன.
முக்கியப் படிப்புகள்:
B.Tech/BE in AI and Data Science:
இது ஒரு செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலின் அடிப்படைகளைக்கொண்ட நான்கு வருட இளங்கலை படிப்பு. இதில் இயந்திர கற்றல் (ML-Machine Learning), ஆழமான கற்றல் (DL-Deep Learning), இயற்கை மொழி செயலாக்கம் (Natural Language Processing), கணினி பார்வை (NLP-Computer Vision) போன்ற பாடங்கள் கற்பிக்கப்படும்.
B.Tech/BE in Computer Science with AI Specialization:
கணினி அறிவியலுடன் AI-யில் நிபுணத்துவம் பெறுவது, AI கருவிகள் மற்றும் நுட்பங்களை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளத்தை வழங்கும்.
B.Sc in Data Science/AI:
இது மூன்று வருட இளங்கலை படிப்பு. இதில் கணிதம், புள்ளிவிவரம் மற்றும் கணினி அறிவியலின் அடிப்படையில் AI மற்றும் தரவு பகுப்பாய்வு பற்றி கற்பிக்கப்படும்.
PG Diploma in AI/Machine Learning:
ஒரு வருட டிப்ளமோ படிப்புகள், ஏற்கனவே இளங்கலை பட்டம் பெற்றவர்கள் AI துறையில் நுழைய உதவும்.
M.Tech/MS in AI/Data Science:
இளங்கலை பட்டம் பெற்றவர்கள் AI துறையில் மேலும் நிபுணத்துவம் பெறவும், ஆராய்ச்சி செய்யவும் இந்தப் படிப்புகள் உதவுகின்றன.
கல்வி நிறுவனங்கள்:
இந்தியாவில் உள்ள IITs, NITs, மற்றும் பல தனியார் பல்கலைக்கழகங்கள் AI மற்றும் தரவு அறிவியல் படிப்புகளை வழங்குகின்றன.
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, அமிர்தா விஸ்வ வித்யாபீடம் போன்ற நிறுவனங்கள் இத்துறையில் சிறப்பான படிப்புகளைக் கொண்டுள்ளன. வெளிநாடுகளிலும் பல முன்னணி பல்கலைக்கழகங்கள் AI துறையில் உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குகின்றன.
வேலைவாய்ப்புகள்:
மென்பொருள் உருவாக்குநர் (Software Developer), தரவு விஞ்ஞானி (Data Scientist), இயந்திர கற்றல் பொறியாளர் (Machine Learning Engineer), AI ஆராய்ச்சியாளர்கள், வணிக நுண்ணறிவு ஆய்வாளர் (Business Intelligence Analyst) போன்ற பல வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.
நிதி, சுகாதாரம், உற்பத்தி, சில்லறை வர்த்தகம் எனப் பல துறைகளில் AI நிபுணர்களுக்கு அதிக தேவை உள்ளது.
AI துறை தொடர்ந்து வளர்ந்து வருவதால், புதுமையான தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு, திறமைகளை வளர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
-ஜான் ❤️

