இன்றைய தினம்.
எவ்வளவோ கனவுகளுடன், பயணப்பட ஆரம்பித்த சில நொடிகளில்…
சப்தமாய் வந்த சத்தம்,
சலனமாய்…
ஆகாய மேகங்கள் அழுதன…
ஆமதாபாத் வானில் கருமேகப்புகையுடன்…
https://amzn.to/4kyhtfE
இருநூறு கனவுகள் நொடியில் சிதைந்ததே!
மின்மினிபோல் மின்னிய விளக்குகள் மறைந்தன…
விண்ணிலே பறந்த பறவை சிறகிழந்து,
உயிர்கள் பலவும் ஊமையாய்…
உறவுகளின் நெஞ்சில் ஆறா வலி.
சிரித்த முகங்கள் சருகாய் கருகி…
சொல்லாத கதைகள் சூனியமாய் முடிந்தனவே…
எரிந்த தீயின் சுவாலை
இதயம் சுட…
அணைந்த விளக்காய் அன்பும் அடங்கியது.
விழிகள் தேடும் வான் வெளியில்
மௌனம் மட்டும் பதிலாய்…
மண்ணில் புதைந்த மலர்களின் அழுகை,
காலம் தந்த கடுஞ்சோகச் சுமை.
மீளாத் துயரில் மூழ்கிய மனித மனங்கள்.
நினைவில் வாழப்போகும் நட்சத்திரங்களாய் நீங்கள்.
அமைதி தேடி அகம் புழுங்கும் நாங்கள்.
ஜான் ❤️
