அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அன்பாக சொல்லி, காத்திருக்கக் கற்றுக்கொடுங்கள்!

By John xavier

About me!

https://amzn.to/4kyhtfE


இன்றைய குழந்தைகள் வேகமாக வளர்கிறார்கள். தொழில்நுட்பம், போட்டி, விருப்பங்கள் – எல்லாமே மின்னல் வேகத்தில் நடக்கிறது. குழந்தை ஏதேனும் விரும்பினால் உடன் கிடைக்கவேண்டுமென்று நினைப்பது இயல்பானது.

ஆனால் வாழ்க்கையில் எல்லாம் உடனே கிடைப்பதில்லை என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கே. அதற்கு கோபம் அல்ல, அன்பே சிறந்த வழி.ஒரு குழந்தை அடம் பிடிக்கும்போது அதை அடக்கத்தக்க வழி கோபமோ சண்டையோ அல்ல.

அன்னையோ தந்தையோ அமைதியாக, “இதைப் பொறுத்துக் கொள், சிறிது நேரத்தில் கிடைக்கும்” என்று சொல்லிக் கொடுத்தால், குழந்தைக்கு பொறுமையின் மதிப்பு புரியும். இது ஒரே நாளில் நிகழாது; தினசரி சொற்களில், செயலில், அன்பில் வெளிப்படும் வாழ்க்கைமுறை தான் இதைக் கற்பிக்கும்.

பல பெற்றோர்கள் குழந்தையின் ஆடத்தைக் “தவறு” என்று எண்ணுகிறார்கள். ஆனால் அது ஒரு உணர்ச்சி வெளிப்பாடு மட்டுமே. அந்த உணர்ச்சியை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு “எப்படி காத்திருக்கலாம்”, “எப்படி சமாதானமாக பேசலாம்” என்று பழக்க முடியும். இதுவே உண்மையான கல்வியின் முதல் அடித்தளம்.

இன்றைய busy வாழ்க்கையில் பெற்றோர்கள் குழந்தையின் மனநிலையை கவனிக்க நேரம் கொடுப்பது குறைந்துள்ளது. ஆனால் ஒரு சில நிமிடங்கள் அவர்களுடன் பேசுவது, மனதை புரிதல் கொண்டு கேட்பது – அதே குழந்தையை மாற்றக்கூடிய சக்தி கொண்டது. அன்பு சண்டையை அடக்கும், நிதானம் அடத்தைக் களைவிக்கும்.

நாளைய நல்ல மனிதர் இன்று அன்பால் வழிநடத்தப்படும் சிறு குழந்தையே. அவர்களுக்கு பொறுமை, மரியாதை, நிதானம் ஆகியவற்றை கற்றுக்கொடுப்பது புத்தகக் கல்வி அல்ல – இதயம் கொண்ட கல்வி. ஆகவே, குழந்தை அடம் பிடிக்கும் போதெல்லாம், நம்முள் கோபத்தை அல்ல, அன்பை எழுப்புவோம்.

“அடம் பிடிக்கும் குழந்தையைக் காத்து, அன்போடு வழிநடத்துவதே” உண்மையான பெற்றோர்கள் தரும் பெரிய கல்வி.

மன அழுத்தமா? இந்த 10 விஷயங்களம்தான் பண்ணுங்க…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *