கோடை விடுமுறை விட்டாச்சு!

புத்தகங்களைத் தூக்கி எறிந்து விட்டு, செல்போனுக்குள் மூழ்கி, சாட்சுக்கும் ரீல்சுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துவிட்டீர்கள் போலும்? என்ன அப்படித்தானே? இதனால் தான் என்ன பயன் உண்டாகப் போகிறது சொல்லுங்கள் பார்ப்போம்? சற்று செல்போனை அணைத்து வைத்து விட்டு, இந்தக் கட்டுரை கொஞ்சம் படித்துதான் பாருங்களேன்.

இனிய மாணவக் கண்மணிகளே!
கோடை விடுமுறை என்பது புத்தகங்களிடமிருந்து தன்னை முழுமையாக விடுவிப்பதன்று. அது – புதிய அனுபவங்களுக்கான உத்வேகம் தரும் ஊற்று. சரியாகப் பயன்படுத்துபவர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம். எனவே தகுந்த முறையில் தயாரிப்பது மிகவும் நல்லது.

புதிய நண்பர்கள், ஆளுமை, விடாமுயற்சி, வெற்றி, சகிப்புத்தன்மை, பொறுப்புணர்வு, நம்பிக்கை ஆகியவைகளையும், கால மேலாண்மையையும், திட்டமிடல் மற்றும் செயல்படுத்துவதையும் கற்க முற்படத்தூண்டும் தருணம் அது. மேலும் சில புதிய பயணங்கள், புதிய தேடல்கள், தேவைகளை பூர்த்தி செய்யும் எண்ணங்களையும் வளர்கிறது. நம் பண்பாடு, கலை போன்றவைகளை எக்ஸ்புலோர் செய்ய நல்லதொரு வாய்ப்பு.

தகுதி, திறமை, மனவலிமையற்றவன் போர் வீரன் ஆகி விட முடியாது. எனவே பெற்றோர்களே! தயார் செய்யுங்கள். எதிர்காலத்தில் தான் தேர்ந்தெடுக்கும் படிப்பினையும், அதில் முறையான பயிற்சி செய்யும் தன்னம்பிக்கையும், விடா முயற்சி செய்யும் திறனையும், காலத்தின் அருமை உணரும் உணர்வும் உள்ளவர்களாகவும், சவால்களை எதிர்நோக்கும் வலிமை உள்ளவர்களாகவும்.

போட்டிதேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களே!
இனி வரும் காலங்களில் போட்டித் தேர்வுகள் என்பதும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது என்பதை நினைவில் கொள். பயிற்சி செய். முயற்சியுடன் நின்று விடாதே!
ஒவ்வொரு தேர்விலும் ‘நான் வெற்றி பெறுவேன்’ என்ற நேர்மறை எண்ணத்துடன் படிப்பதன் அவசியத்தை உணருங்கள்.

அதற்கு சிறந்த செயலாற்றலும், விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம். நினைவில் கொள்ளுங்கள். பல்பை கண்டுபிடிக்கும் முன் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு அனைத்தும் தோல்வியே. முதல் முயற்ச்சியிலேயே எல்லாமே வெற்றியாக மாறிவிடாது. தோல்விகளை வெற்றியின் படிக்கட்டாக்குங்கள்.

பொறுமை அவசியம். விதை விருட்சமாக சிறிது காலம் தேவைப்படும். பொறுமையை கையாள்பவனின் வெற்றிகள் பன்மடங்கு அதிகம். அடைந்தே தீருவேன் என்பதில் நேர்மறையான உணர்வு இருக்கட்டும். ஆயிரம் தடைகள் இருந்தும் செல்ப் மோட்டிவேஷன் மிகவும் முக்கியம். அனைத்தையும் தகர்த்தெரியலாம்.

ஞானம் எல்லா அனுபவங்களிலும் கிடைக்கும். தேடி அலையத் தேவையில்லை. இருக்கும் இடம் தான் போதி மரம் என்றுணர். முதலில் எது தேவை, எது தேவையில்லை என்பதை நன்கு ஆராயும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். தேவையானவைகளில் மட்டும் மனம் செல்லட்டும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள். ஆம். கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்த தவறாதீர்கள். ஒவ்வொரு வாய்ப்பும் வெற்றிகளையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். அவ்வப்போது உன்னையே உற்றுப் பார். ஆராய்ச்சி கொள். உன்னை நினைத்து நீயே பெருமை கொள். எதிர்கால இலக்குகளை நீயே தீர்மானி. பெற்றோரிடமும் பெரியோரிடமும் பகிர்ந்து கொள். அவர்களின் ஆலோசனைகளையும் ஆராய மறவாதே!

தேர்வு காலம் முடிந்தது. விடுமுறையினை உபயோகமாக செலவழியுங்கள். 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் தூக்கம் போக மீதி நேரம் உங்கள் கையில். திட்டமிடுங்கள், செயல்படுத்துங்கள். சத்துள்ள உணவு அவசியம். தண்ணீர் தாராளமாக அருந்துங்கள். வெயிலின் தாக்கம்  அவ்வப்போது அதிகமாய் இருக்கிறது வெயிலில் வெகு நேரம் விளையாடுவதை தவிருங்கள். தியானம், யோகா, பொருட்காட்சி, பயணம், உறவினர் வீடு போன்றவை கூடுதல் அனுபவித்தினை நல்கும். ஆலயங்களுக்கு செல்லுதல், கடவுளின் கருணையும் ஆசியும் கிட்டும். அதுவே எதிர்காலத்திலும் தொடரட்டும்.

இனிமேல் இருக்கும் ஒவ்வொரு நொடியும்  தங்கத் துளிகள் என்பதை உணர்ந்து தேர்விலும், அடுத்த கல்வி ஆண்டின் பொதுத்தேர்வுகளிலும், போட்டி தேர்வுகளிலும் முழு வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அ. சகாய ஜான் சேவியர் M. Sc.,B. Ed.,
8870744297
https://amzn.to/4kyhtfE

2 thoughts on “கோடை விடுமுறை விட்டாச்சு! <br>”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *