விடாமுயற்சி – வெற்றியின் முதல் படி.

விடாமுயற்சி – வெற்றியின் முதல் படி. 

அது ஒரு சின்ன கிராமம். அந்த கிராமத்துல கண்ணன் என்ற சிறுவன் இருந்தான். அவன் மிகவும் அமைதியானவன்; அவனுக்குள்ளே பல கனவுகள். அவனுக்கு எப்போதும் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு தன்னைைவிட மேலாக இரு்ககிறார்களோ என்று எண்ணி எண்ணி மனம் உடைந்து போவான். 

இதனை அறிந்த ஆசிரியர், அவனின் இந்த மனப்பான்மையை உடைத்தெறிந்து, அவன் கனவுகளை அடைய வழிகாட்ட வேண்டும் என்று எண்ணி, அவனிடம் ஒரு விதையை கொடுத்து, அதனை நன்றாக வளர்த்துவிட்டு தன்னை சந்திக்குமாறு கூறினார். கண்ணனுக்கு ஒன்றுமே புரியவில்லை. விதை விதைக்கப்பட்டு, நாளுக்கு நாள் அதன் மீதான கவனம் அதிகரித்தது.

சில நாட்கள் கடந்தன. விதை முளைத்தபாடில்லை. நண்பர்களின் விதைகள் எல்லாம் நன்றாக முளைத்திருந்தன. எந்த வேலையும் எனக்கு அமையவில்லை. என்று எண்ணிக்கொண்டு தன்னைத்தானே நொந்து கொண்டிருந்தான். ஆசிரியரிடம் விதை முளைக்கவில்லை என்பதை சிறிது பயத்துடன் கூறினான். ஆசிரியர் சிரித்துக் கொண்டே, “நீ தொடர்ந்து முயற்சி செய்” என்றார். கண்ணன் மீண்டும் முயற்சி செய்யத் தொடங்கினான். 

மழையும் வெயிலும் கடந்து, விடாமல் பார்த்துக் கொண்டான். சில வாரங்களுக்குப் பிறகு சிறிய முனை தோன்றியது. அதைப் பார்த்த கண்ணனின் கண்கள் மின்னியது, மகிழ்ச்சியில். “அன்பும் கவனமும் சிறு முளை பெரிதாகியது. அன்றுதான் தெரிந்தது, விதை அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. 

அனைவராலும் கைவிடப்பட்ட முயற்சிகள் ஒரு சிலரால் மட்டும் சாத்தியமாகிறது. கண்ணன் அதைக் கேட்டதும் அவனுக்கு ஒரு பெரிய உண்மை புரிந்தது. வெற்றி என்பது எளிதில் நாம் விரும்பும் நேரத்திலேயே கிடைக்கும் என்பது சாத்தியமில்லை. 

பொறுமையும் விடாமுயற்சியும் வெற்றியின் படிக்கட்டுகள். நம்பிக்கையுடன் முன்னேறினால் வெற்றி நிச்சயம். அன்றிலிருந்து கண்ணன் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு உடைந்து போவதை நிறுத்திவிட்டு, தன் லட்சிய பயணத்தை தொடர்ந்தான். காலப்போக்கில் அவனின் கதை மற்றவர்களுக்கு ஒரு தூண்டுகோலாய் மாறியது. 

விடாமுயற்சி வெற்றியின் முதல் படி. http://www.shadowmakr.in/

– ஜான்

2 thoughts on “விடாமுயற்சி – வெற்றியின் முதல் படி.”

  1. Pingback: எல்லா தவறுகளுக்கும் தண்டனைதான் தீர்வு என்று இல்லை; - shadowmakr

  2. Pingback: Braino Brain Fest 2026 - shadowmakr

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *