நீங்க ட்ரெக்கிங் போக பிளான் பண்றிங்களா?

கொடைக்கானல், ஒரு அழகான கிராமம். பசுமை போர்த்திய புல்வெளிகள், நீண்ட நெடிய மரங்கள், சுற்றுலாவிற்காக வரும் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் ஒரு அசாத்தியமான திறமை இந்த கொடைக்கானலுக்கு உண்டு. கொடைக்கானலில் நாம் கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா தளங்கள் உண்டு. இப்போதெல்லாம் எல்லோரும் ட்ரெக்கிங் என்ற பெயரில் புதுப்புது இடங்களை எக்ஸ்ப்ளோர் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ட்ரெக்கிங் அப்படின்றதுல்லாம் நிறைய பேர் ஒர்க் பண்றாங்க, நிறைய புதுப்புது இடங்களை அறிமுகம் செய்றாங்க. கொடைக்கானல்ல ட்ரக்கிங் போறதுக்கு முன்னாடி வனத்துறையிடமிருந்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி கடிதம் பெற வேண்டும். அப்படி அனுமதி கடிதம் பெற்றுதான் ட்ரக்கிங் போகணும் அப்படின்றது ஒரு கட்டாயமான விதி. அப்படி இல்ல அப்படின்னா அது வந்து சட்ட விரோதமான செயலா ஆயிரும். இங்க நிறைய வனவிலங்குகள் இருக்கு. அந்த வனவிலங்குகள் இதுக்கும் துன்பத்தை கொடுக்காம ட்ரக்கிங் போற அனுபவம் இருக்கே அப்பப்பா சொல்லவே முடியாது. நம்ம உடம்புல உள்ள நிறையநோய்களுக்கும் இந்த ட்ரக்கிங் அப்படின்றது ஒரு அவசியமான ஒண்ணு. வருஷத்துல ஜூன் ஜூலை மாதங்கள்ல கொடைக்கானல் ல ட்ரக்கிங் போனா இன்னும் ரொம்ப நல்லா இருக்கும். அதுலயும் உயரமான சிகரங்கள், தமிழ்நாட்டிலேயே ரொம்ப உயரமான சிகரமான பெருமாள்மலை உச்சி அப்படின்னு ஒரு ஊர் இருக்கு. அந்த ஊரோட உச்சியில ஒரு பெரிய மலை இருக்கு, அந்த மலையை ட்ரக்கிங் போறது ரொம்ப ரொம்ப சாகசமான பயணமா இருக்கும். அந்த பயணத்துல நிறைய வனவிலங்குகளை சந்திக்க நேரிடும். ஆள் நடமாட்டமே இல்லாம இருக்கிற பகுதிகள் எல்லாம் நிறைய கடந்து போக வேண்டியது இருக்கும். அங்க மேல ஒரு கோயில் இருக்கு அப்படின்னு சொல்றாங்க, அதுல வருஷத்துக்கு ஒரு தடவை தான் பூஜைகள் எல்லாம் நடக்கும். அது பொங்கலை ஒட்டி நடக்கும் அப்படின்னு சொல்றாங்க. அங்க மனுஷங்க போயி வர்றதுக்கான வழிகள் எல்லாம் இருக்கும். அதை யூஸ் பண்ணி நம்மளும் அந்த உச்சிக்கு போகலாம். அந்த உச்சியில 360 டிகிரி கோணத்துல எல்லா இடங்களையும் பார்க்க முடியும். அது மேகங்களுக்கு இடையில ரொம்ப ரம்மியமான காட்சி. அந்த பெருமாள் மலை அப்படின்ற ஒரு பெரிய சிகரம் கொடை.க்கானல்ல இருந்து பார்க்கிறதுக்கு ஒரு லிங்க வடிவத்தில் இருக்கும் இந்த உச்சி. இந்த பெருமாள்மலை உச்சி அப்படின்ற இடத்துக்கு போறதுக்கு நிறைய வழிகள் இருக்கு. பெருமாள் மலை அப்படின்ற இடத்துல இறங்கி அங்க இருந்து வனத்துறை அதிகாரிகள்ட்ட அனுமதி பெற்று அங்கிருந்து மேல்நோக்கி உப்புப்பாறை அப்படின்னு ஒரு இடத்தை அடைஞ்சோம்னா அங்கிருந்து ஒரு 7, 8 கிலோமீட்டர் மலை மேலேயே நடந்து போகும்போது பெருமாள்மலை அப்படின்ற சிகரத்தை அடைஞ்சிடலாம். அங்க காட்டு விலங்குகள் நடமாட்டம் அதிகமா இருக்கும். காட்டு மாடு, சிறுத்தை புலிகள் கூட பார்க்கலாம். மான்கள் கூட அங்க இங்க ஓடிக்கிட்டு இருக்கும். காட்டுகாட்டுப் பன்றிகளையும் அடிக்கடி நம்ம பார்க்கலாம். வடகவுஞ்சி அப்படின்னு ஒரு ஊர் இருக்கு. அந்த இடத்துல இருந்து மேல்நோக்கி பயணம் செஞ்சாலும் சீக்கிரமா அந்த பெருமாள்மலை உச்சி அப்படின்ற சிகரத்தை அடைஞ்சிடலாம். பெருமாள் மலை அப்படின்ற ஊர்ல இருந்து ஒரு ஏழு எட்டு கிலோமீட்டர் தொலைவுல பிஎல் ஷெட் அப்படின்னு ஒரு ஊர் இருக்கு. அந்த ஊர்ல இருந்தும் நம்ம மேல்நோக்கி ஏறி போனோம்னா பெருமாள்மலை அப்படின்ற உச்சியை அடைஞ்சிடலாம். இது எல்லாமே அதிகாலையில கிளம்பி நைட்டுக்குள்ள வீட்டுக்கு வந்தரலாம். அந்த மாதிரி பிளான் பண்ணோம்னா ரொம்ப நல்லா இருக்கும். ஒருவேளை மேல நம்ம தங்கணும் அப்படின்னு நினைச்சோம்னா அது சேஃப் இல்லை. வனவிலங்குகளோட அட்டகாசம் அதிகமா இருக்கும். சில நேரங்கள்ல உயிருக்கே கூட ஆபத்தான இருடலாம். அதனால ரொம்ப கவனமா போயிட்டு வனத்துறை அதிகாரிகள்ட்ட மீண்டும் வந்துட்டோம் அப்படின்றதை ரிப்போர்ட் பண்ணிரனும். வழி நெடுகிலும் நீண்ட, நெடிய குங்குலிய மரங்களைக் காணலாம். மேலும் பல வகையான மர மரங்கள், செடிகளை, கொடிகள் அனைத்தும் இருக்கும். ஒரு அற்புதமான ட்ரெக்கிங் அனுபவமா இருக்கும். உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் நல்லா ஓப்பனாகி, வியர்வையோட நம்ம இந்த மலைப்பயணத்தை ஏறும்போது நம்ம உடம்புல உள்ள எல்லா வலிகளும் பறந்து போய், மனதிற்கு நிம்மதியை தரும். ஒரு அற்புதமான மலையேற்றமா இருக்கும். உங்க வாழ்க்கையில மறக்கவே முடியாத ஒரு நிகழ்வுகள்ல இதுவும் ஒண்ணா மாறிடும். யாரெல்லாம் இந்த பெருமாள்மலை உச்சியை அடையணும் அப்படின்னு நினைக்கிறீங்களோ, அவங்க கமெண்ட் பண்ணுங்க. அதோட பிக்சர்ஸ நான் உங்களுக்கு டைரக்டா சென்ட் பண்றேன். இதே போல மேலும் இன்ட்ரஸ்டிங்கான கொடைக்கானல் பற்றிய தகவல்களுக்கு என்னை ஃபாலோ பண்ணுங்க. என்னோட இன்ஸ்டாகிராம் பேஜும் கொடுத்திருக்கேன். உங்களோட ட்ரெக்கிங் அனுபவம் எப்படி இருந்துச்சுன்னு போயிட்டு வந்து சொல்லுங்க. இதுக்கு முன்னாடி யாராவது இந்த சிகரத்துக்கு போயிருந்தீங்கன்னா, உங்களோட அனுபவம் எப்படி இருந்துச்சுன்னு கமெண்ட்ல பகிர்ந்துக்கோங்க. மேலும் இதுபோன்ற புதிய புதிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாம். தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்க. @shadowmakr

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *