நண்பனா, எதிரியா இந்த செல்போன்?

https://amzn.to/4kyhtfE

குறிப்பாக குழந்தைகளுக்கு இணையப் பாதுகாப்பு வழிகாட்டியாக இந்த பதிவு.
இப்போ, “செல்போன் பயன்பாடு இல்லாமல் ஒரு நாள் கூட நாகராது என்பது நூற்றுக்கு நூறு உண்மையா என்று கேட்டால், பலரும் சிரித்துக் கொண்டே “உண்மை!” என்றுதான் சொல்வார்கள்.

ஆனா, அந்த செல்போன் உண்மையில் நம்முடைய நண்பனா இல்ல எதிரியா?
இந்த கேள்விக்கு பதில் நாம் பயன்படுத்தும் முறையில்தான் இருக்கிறது.

செல்போன் – நம் அறிவின் கதவா?

செல்போன் ஒரு சக்திமிக்க கருவி.
ஒரு கிளிக் செய்தாலே இந்த உலகம் முழுவதும் இருக்கும் அறிவு நம்மிடம்.
YouTube மூலம் பாடங்கள் கற்றுக்கொள்ளவும்,
Google மூலம் சந்தேகங்களை தீர்க்கவும்,
Online classes மூலம் முன்னேறலாம். ஆனால்
சரியாக பயன்படுத்தினால், செல்போன் ஒரு சிறந்த ஆசிரியர்.


அதே செல்போன் – மறைந்திருக்கும் ஒரு பேராபத்துனு சொன்னா நம்புவீங்களா?
ஆனால் கவனமாக இல்லையென்றால், செல்போன் ஆபத்தாகவும் மாறும்.
தெரியாதவர்களுடன் பேசுவது
தனிப்பட்ட தகவல்களை பகிர்வது
தவறான இணையதளங்களை பார்ப்பது
அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது
இவை எல்லாம் குழந்தைகளின் மனநலம் மற்றும் படிப்பை பாதிக்கும்.

இன்டர்நெட்டில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

இது தான் மிக முக்கியமான விஷயம். மாணவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள்:
உங்கள் Password ஐ யாரிடமும் பகிர வேண்டாம்.
உங்கள் Address, Phone number போன்ற தகவல்களை எங்கும் உள்ளீடு செய்யாதீர்கள்.
Unknown லிங்க் குகளை click செய்யாதீர்கள்.
Social media-வில் strangers-ஐ accept செய்ய வேண்டாம்.
“Think twice Before You Click” – என்பதை மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.

பெற்றோர்,ஆசிரியரின் பங்கு

மாணவர்கள் மட்டும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை விட, பெற்றோர்களும் ஆசிரியர்களும் வழிகாட்ட வேண்டும்.
Screen time-ஐ கட்டுப்படுத்த முயல வேண்டும்.
Open discussion வைத்திருப்பது நன்று.
மாணவர்களை பயமுறுத்தாமல் விழிப்புணர்வு கொடுப்பது அவசியம்.
நல்ல வழிகாட்டுதல் என்பது , பல பிரச்சினைகளைத் தவிர்க்கும்.

தீர்மானம் உங்கள் கையில் தான்.
செல்போன் நல்லதா இல்லை கெட்டதா என்பது இப்போது முக்கியமல்ல.
நாம் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே மிகவும் முக்கியம்.
சரியான முறையில் பயன்படுத்திப்பார், அது உங்கள் வெற்றியின் நெருங்கிய நண்பன்.
தவறாக பயன்படுத்தினால், அது உங்கள் நேரத்தை திருடும் மிகவும் மோசமான எதிரி.
அதனால் நினைவில் இருக்கட்டும்.

உங்களின் கருத்து எனக்கு உற்சாகமூட்டுவதுடன், மேலும் மேலும் நேரத்தை ஒதுக்கி எழுதுவதை ஊக்குவிக்கும். உங்களுக்கு தேவையான தலைப்புகளையும் கொடுங்கள் நான் எழுத…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *