உட்கார்ந்த வாழ்க்கை முறையில் வேலையா,(Sedentary lifestyle) என்ன செய்யலாம்?

விடாமுயற்சி – வெற்றியின் முதல் படி.

உட்கார்ந்த நிலையிலே அதிக நேரம் வேலை செய்கிறீர்களா அப்ப இந்த பதிவு உங்களுக்குத்தான். இந்த பதிவுல அதிக நேரம் உட்கார்ந்து  வேலை பாக்குற ஆளா நீங்க இருந்தீங்கனா,  முறையா  என்னென்ன செய்யலாம் அப்படின்றத பத்தி ஒரு சின்ன தொகுப்பை உங்களுக்காக எழுதி இருக்கேன். இந்த தொகுப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா மேலும் என்ன ஆர்வத்துடன் எழுதுவதற்கு, உங்களால் முடிந்த லைக்கையும் கமெண்டையும் போடுங்க. இன்னும் எழுதுவதற்கான தூண்டுகோலா இருக்கும் அப்படின்னு நினைக்கிறேன் நீங்க அத பண்ணுவீங்கன்னு நம்புறேன்.

சரி வாங்க இந்த பதிவுக்குள்ள போகலாம். சுருக்கமா என்னென்ன விஷயங்கள் செய்யலாம் அப்படின்றத பத்தி இந்த தொகுப்பில் சொல்லி இருக்கேன்.

1. சத்தான உணவு

சத்தான உணவு ஒரு முதன்மையான தீர்வா இருக்கும். நம்மளுக்கு ஈஸியா டைஜஸ்ட்(digest) ஆகுற மாதிரியான உணவு வகைகளை எடுத்துக்கிறது ரொம்ப சிறப்பா இருக்கும். அதுலயும் குறிப்பா காய்கறி, புரதம் அதிகம் சேர்க்க வேண்டும்.

அடிக்கடி காய்கறி, பழங்கள், சாலட் லாம் எடுத்துக்கிறது ரொம்ப நல்லது. நிறைய தண்ணீர் குடிக்கணும். அதிகமான தண்ணீர் குடிக்கும் போது மெட்டபாலிசம் உடம்புல நல்லா நடந்து, தேவையற்ற கொழுப்புகள் உடலோட கீழ் பகுதியில சேர்ந்து, இடுப்பு, தசைகள், கால் இந்த மாதிரி உள்ள இடங்களில் அதிகமான தேவையற்ற கொழுப்புகள் தேங்கி, மற்ற உடல் உபாதைகள் வருவதை தடுக்குது.

2. தினமும் உடற்பயிற்சி

நடைப்பயிற்சி அப்படிங்கிறது தினமும் நம்மளோட வாழ்க்கையில ஒரு அங்கமா இருக்கணும். இந்த நடைப்பயிற்சி  நம்மளோட உடல் சுறுசுறுப்பு அடைவதற்கு ரொம்ப உதவியா இருக்கும். எல்லா நாளும் உடற்பயிற்சி செய்றது முடியாத காரியமாய் இருந்துச்சுன்னா அட்லீஸ்ட்
வாரத்தில் 5 நாட்களாவது 30 நிமிட உடற்பயிற்சி அவசியம். வெளியில போயி நம்ம நடை பயிற்சி செய்ய முடியலைன்னா மொட்டை மாடியிலயோ வீட்டுக்குள்ளேயே 30 நிமிடங்கள் செஞ்சோம்னா அதுவே நம்மளுக்கு உதவிகரமாக இருக்கும். ஆனால் என்ன பொறுத்த அளவு வெளியில காற்றோட்டத்தோடு செய்வது, நம்மளோட நுரையீரலுக்கு அதிகமான ஆக்சிஜன் கிடைச்சு நல்ல மூளை சுறுசுறுப்பாக இயங்க நல்லா இருக்கும்.

3. மன அழுத்தம் குறைக்க

நிச்சயமாக ஒரே இடத்தில் வேலை பார்க்கிறவங்களுக்கு மன அழுத்தம் அதிகமா இருக்கும். அந்த மன அழுத்தத்தை போக்குவதற்கு சில யோசனைகளை நான் உங்களுக்கு தரேன். அதுலயும் குறிப்பாக யோகா மூச்சுப் பயிற்சி தியானம் போன்றவற்றை அடிக்கடி செய்தால் உங்களோட மனம் அழுத்தம் குறைந்து நிம்மதியா இருக்கும்.

எப்போதும் சிரிச்ச முகமாக இருப்பீங்க. எல்லா விஷயங்களையும் கவனமா இருப்பீங்க. அழகா நேர்த்தியா எல்லா வேலைகளையும் செய்வதற்கான மன உறுதி உங்களுக்கு கிடைக்கும். பாடல் கேட்டுக் கொண்டே நம்ம வேலை செய்றதும் ஒரு விதமான மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தா செயல்படும். அதுலயும் நம்மளுக்கு பிடிச்ச பாட்டுகள் அப்படின்னா இன்னும் ரொம்ப மன அழுத்தத்தை குறைக்கும். வேணும்னா நீங்க ட்ரை பண்ணி பாருங்க. என்னோட stress ஆ இருக்கிற நேரத்துல நான் கேட்கிறேன். எனக்கு புடிச்ச பாடல்களை ஒரு பிளே லிஸ்ட் போட்டு வச்சிருப்பேன். அதை நான் கேட்டுக்கிட்டே என்னோட வேலையை செய்யும்போது எனக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும். இதுதான் நான் பர்சனலா எக்ஸ்பீரியன்ஸ் பண்ண விஷயம் அதை நான் உங்களுக்கு ஷேர் பண்றேன்.
எனவே, யோகா, மூச்சுபயிற்சி, தியானம் செய்ய வேண்டும்.

4. போதுமான தூக்கம்

தினமும் குறைந்தது 7 முதல் 9 மணி நேர தூக்கம் அவசியம். செல்போன் பார்ப்பதை குறைத்துவிட்டு, அன்றாட வேலைகளை முடித்துவிட்டு, சீக்கிரம் உறங்குவது நல்லது. நல்ல ஆழ்ந்த உறக்கம் மன அழுத்தத்தை குறைத்து நம் உடலுக்கு தேவையான positive எனர்ஜியை கொடுக்கும்.


இந்த தலைப்புல கொடுத்திருக்க விஷயங்கள் உங்களுக்கு பிடிக்கும் னு நம்புறேன். மேலும், புதிய புதிய விஷயங்களை தெரிஞ்சுக்கணுமா அந்த topics அ comment ல சொல்லுங்க. மேலும் எழுத உதவியா இருக்கும்.

https://amzn.to/4kyhtfE

எல்லா தவறுகளுக்கும் தண்டனைதான் தீர்வு என்று இல்லை;

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *