Thamukkam. Ground @ Madurai
இன்னைக்கு பிரைனோ பிரைன் ஃபஸ்ட் 2026 அப்படின்னு ஒரு பெரிய ப்ரோகிராம் நடக்குது. அதுல சவுத்து தமிழ்நாட்லருந்து நிறைய பேர், சின்ன குழந்தைகளை அபேகஸ் காம்படிஷனுக்காக கூட்டிட்டு வந்திருக்காங்க. அங்கே, நூத்தி எண்பதாவது ரீஜனல் அபேகஸ் காம்படிஷன் ஃபெஸ்டிவல் அப்படின்னு, மதுரையில நடத்துறாங்க. இது எங்க நடக்குது அப்படின்னு சொன்னோன்னா, தமுக்கம் மைதானம் அப்படின்ற இடத்துல நடக்குது. இந்த தமுக்கம் மைதானத்துல ரொம்ப பிரமாண்டமான ஒரு பெரிய ஹால்ல, காலைல ஆறு மணிலருந்து இப்ப வரைக்கும் நடந்துக்கிட்டு இருக்கு.
இப்ப டைம் வந்து ஒரு ஏழு, அப்படின்னு வச்சுக்கோங்க. இன்னும் ஆயிரக்கணக்கான குழந்தைகள், அதுல நிறைய பார்டிசிபேட் பண்ணிருக்காங்க. அதுல கோல்டு மெடல், சில்வர் மெடல், பாரான்ஸ், சாம்பியன்ஷிப், இந்த மாதிரி நிறைய வெரைட்டி வெரைட்டி ஆஃப் ப்ரைசஸ் வந்து கொடுத்திருக்காங்க. நிறைய வாலண்டியர்ஸ் இதில் ஒர்க் பண்ணுறாங்க.
நிறைய வந்து அபேகஸ் சம்ஸ்லாம் செய்கிறதுக்கான வாய்ப்புகள் இருக்குது. இதுல, இது ஒரு போட்டி மட்டும் இல்லாம, இதுலருந்து நம்மளுக்கு லைஃப் ஸ்கில் அப்படின்றதையும் இவங்க டெவலப் பண்ணுறதுக்கு ஹெல்ப் பண்ணுறாங்க. ஸோ இந்த லைஃப் ஸ்கில் ஓரியண்டட்டு ப்ரோகிராம் வந்து தமிழ்நாட்டில் வேற வேற பேர்ல நிறைய நடக்குது. அதுலையும் குறிப்பா இந்த பிரைனோ பிரைன் அப்படின்றது வந்து இன்னும் ரொம்ப ஸ்பெஷலான ஒன்னாக இருக்குது.
இதுல கொடுக்குற அந்த ஷீல்டு, கப், மெடல், இந்த மாதிரி உள்ள விஷயங்கள்லாம் பசங்க இன்னும் நல்லா மோட்டிவேட்டாகி, இந்த சம்ஸ் பண்ணுறதுல ரொம்ப பூஸ்ட்ரப் ஆகி, அதே மாதிரியே, அவங்களோட லைஃப் ஸ்கில்ல, லைஃப்ல பயன்படுத்தி, முன்னேறதுக்கும் ரொம்ப ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். மூளையை நல்லா ஷார்ப் ஆ வச்சுக்கிறதுக்கு உதவுது, கான்சண்ட்ரேஷன் பவர் இன்கிரீஸ் பண்ணது, அதே மாதிரியே ரெகுலாரிட்டி, அதுக்கப்புறம் டிஸ்ட்ராக்ஷன் இல்லாம ஒரு சிச்சுவேஷனை எப்படி ஹாண்டில் பண்ணணும், அப்படின்ற ப்ராப்ளம் சால்விங் ஸ்கில்லையும் இங்கே கத்துக்க கொடுக்குது. இது எல்லாத்தையுமே மோட்டிவேட் பண்ணுறாங்க.
அதே மாதிரி ஸ்கூல்ல பேசாம இருக்கிற குழந்தைகள் கூட இங்கே போய் பேசுறதுக்கான வாய்ப்புகள் நிறைய இருக்குது. அதே மாதிரி கம்யூனிகேஷன் ஸ்கில் வளர்றது. இன்டர்பர்சனல் ஸ்கில் வந்து டெவலப் பண்ணுறாங்க. அதே மாதிரி, எல்லாத்துக்கும் இண்டிவிஜுவலா ஒரு ஃபீட்பேக் கொடுக்குறாங்க. அந்த மாதிரி இண்டிவிஜுவலா ஃபீட்பேக் கொடுக்கும்போது, ஒவ்வொரு குழந்தைக்கும் மோட்டிவேட் ஆகி, சூப்பரான லெவலில் வராங்க.